Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே உள்ள நாகனம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ எட்டிமரத்து முனியப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள நாகனம்பட்டி கிராமத்தில்  அருள்மிகு ஶ்ரீ எட்டிமரத்து முனியப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஊர்க்காவல் தெய்வமாக விளங்கும் முனியப்பன் சாமி சிலையை ஒன்றை புதியதாக கட்டி முடிக்கப்பட்டு அதற்கு  வர்ணம் பூசி கும்பாபிஷேகம் நடத்தினர்.


முன்னதாக திங்கள் கிழமை முகூர்த்த கால் நடுதல், கங்கணம் கட்டுதல், முலைப்பாளிகை இடுதல் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக வேள்வி மூல மந்திரம் ஏமம் ஓத பூர்ணாதி தீபாரதனையை தொடர்ந்து ஸ்ரீ எட்டி மரத்து முனியப்பனுக்கு மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இந்த விழாவில் குப்புசாமிமுருகன் ஊர் கவுண்டர், முருகன் மந்திரி கவுண்டர்,சிவகுமார் கோல்காரர், மாதம்மாள் கோவிந்தசாமி ஊராட்சி மன்ற தலைவர், முருகன் சரசு முன்னாள் தலைவர், முனியம்மாள் சக்திவேல் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தன் தேமுதிக தெற்கு ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பக்தர்கள் ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை மகளே பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies