Type Here to Get Search Results !

பாலக்கோடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற, ஐந்து பேருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முதல்வராக பணியாற்றி வந்த அரசு, தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த பச்சை, டிரைவர்கள் லிங்கமூர்த்தி, சுந்தரம், நடத்துனர்கள் சுந்தரம், அமனுல்லா ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர். இதையடுத்து, பாலக்கோடு பணிமனை அலுவலகத்தில், ஓய்வு பெற்றவர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக கிளைமேலாளர் அழகரசன் தலைமையில் நடந்தது.


தொழிற் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், யுவராஜ் மற்றும் சக பணியாளர்கள், ஓய்வு பெற்றவர்களை பாராட்டினார்கள். கிளை மேலாளர் அழகரசன், ஓய்வு பெற்றவர்களுக்கு பணி கொடை வழங்கி பாராட்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies