Type Here to Get Search Results !

”நான் முதல்வன் திட்டத்தின் கீழ்” பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணிகள், இரயில்வே பணிகள் ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்.


தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ”நான் முதல்வன் திட்டத்தின் கீழ்” பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணிகள், இரயில்வே பணிகள்  ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சித் தலைவர்  தகவல்.

 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணிகள், இரயில்வே பணிகள் ஆகிய  போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி  மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படவுள்ளது.     தருமபுரி மாவட்டத்தில்  போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில் பணியாளர் தேர்வாணையம்,  வங்கிப்பணிகள், இரயில்வே பணிகள் ஆகிய  தேர்வுகளுக்கான  இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு   தருமபுரியில் மே 10-ஆம் தேதி முதல் (உத்தேசமாக) துவங்கப்படவுள்ளது.  

 

இப்பயிற்சியில் சேரவிருப்பம் உள்ளவர்கள் https://bit.ly/3LnfCum என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும் அல்லது கீழ்கண்ட அலுவலர்களை தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம். 

 

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்/அலுவலகங்கள் 

  1.  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  9498042426 
  2. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தருமபுரி 97510-83297 
  3. முதல்வர், பாலக்கோடு அரசு கலைக்கல்லூரி 94439-10785 
  4. உதவி இயக்குநர், மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் 98428-57035 

 

பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணிகள், இரயில்வே பணிகள் ஆகிய  போட்டித் தேர்விற்கு தயாராகும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள போட்டித்தேர்வர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், காலதாமதமின்றி விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறு அனைத்து இளைஞர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies