Type Here to Get Search Results !

கழனிகாட்டூர் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க பூமி பூஜையுடன் பணியை துவக்கிவைத்த SP.வெங்கடேஸ்வரன் MLA.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், நாகர்கூடல் ஊராட்சி, கழனிகாட்டூர் கிராமத்தில் மலைப்பகுதியை ஒட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சுவர் இன்றி திறந்தவெளியில் பள்ளி கட்டிடங்கள் அமைந்துள்ளது. அதிக நச்சு மிக்க பாம்புகள் மற்றும் பூச்சி வகைகள் அதிக அளவில் பள்ளிக்குள் நுழைகின்றன. 

மேலும் இரவு நேரங்களின் சமூக விரோதிகள் பள்ளியில் நுழைந்து, மது அருந்திவிட்டு அங்கேயே மதுபுட்டிகளை உடைத்துவிட்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி, பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் பொதுமக்களும், பள்ளியின் தலைமை ஆசிரியரும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்களிடம் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். 

உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 3.50 இலட்சம் ஒதுக்கீடு செய்து  பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டி பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்வில் பாட்டாளி மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, ஒன்றிய செயலாளர் கி.மணி, ஒன்றிய கவுன்சிலர் காளியப்பன், ஒன்றிய அமைப்பு தலைவர் பாக்கியராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஊர்கவுண்டர் மாதேஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies