
நகர செயலாலர் ராஜசேகர் டாக்டர்.கே.ஜி.எம்.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கடந்த புதன்கிழமை தொடங்கி 7 நாட்களாக நடைபெற்று வந்த இப்போட்டியில் சுமார் 70வதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இத்தொடரின் இறுதி சுற்றில் செக்கோடி அணி மற்றும் பாலக்கோடு டைமன் கார்டன் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. டாஸ் வென்ற செக்கோடி அணியினர் முதலில் பேட்டிங் செய்தனர், இறுதிப்போட்டி எட்டு ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் முதலில் பேட் செய்த செக்கோடி அணியினர் 58 ரன்களை எடுத்து இலக்கு நிர்ணயித்தனர்.
இரண்டாவதாக களமிறங்கிய டிஜிபி அணியினர் 56 ரன்களை மட்டும் எடுத்து தோல்வியைடைந்தனர். செக்கோடி அணி இரண்டு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாலக்கோடு அளவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இரண்டு அணிகள் மாவட்டத்தில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடதக்கது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஸ்ரீ மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோவிந்தராஜீ, டிஎஸ்பி சிந்து பரிசு தொகை மற்றும் கோப்பைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் துரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேளவள்ளி சேகர், ராஜா, ராஜவேல், சிலம்பு மற்றும் நிர்வாகிகள், நடுவர்கள் உடற்கல்வி ஆசிரியர் ரவி டைமன் கார்டன் கிரிக்கெட் கிளப் தலைவர் வடிவேல் நிருபர் வேலு மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். திரளான பொது மக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.
.gif)


