இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன்.எம்.எல்.ஏ, கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசுகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முழுவதும் இரண்டு கோடி தொண்டர்களை உறுப்பினராக சேர்க்கவும், ஒவ்வொரு தொகுதியிலும் 65 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தொண்டர்கள் புதிய உத்வேகத்துடன் பழைய உறுப்பினர்களை புதுப்பிக்கவும் புதிதாக உறுப்பினர்களை சேர்க்கவும் அதிக அளவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உறுப்பினராக சேர்க்க வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் சங்கர், கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர்சுப்ரமணி, பாலகிருஷ்ணன், குழந்தை, கிருஷ்ணன், கண்ணையன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தசாமி, கிளை செயலாளர்கள் முருகன், ராஜா, மோலைமுருகன்,மாதையன் ,கட்சி முன்னோடிகள், பாலக்கோடு 18 வார்டு கிளை செயலாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

