ஒகேனக்கல் சத்திரம் பகுதி சேர்ந்த வேல் இவரது மனைவி பூர்ணிமா இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். நேற்று பூர்ணிமாவின் தாயார் நினைவு நாளை முன்னிட்டு காலையில் ஏரியூர் அஜ்ஜனஅள்ளி கிராமத்தில் உள்ள பூர்ணிமாவின் தாயார் வீட்டில் சாமி கும்பிட ஏற்பாடு செய்த நிலையில். தாயார் இறந்த இடத்திற்கு அனைவரும் சென்று விட்ட நிலையில் பூர்ணிமாவின் மகள் பவித்ரா(22) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அங்கு பவித்ரா காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர், உறவினர் வீட்டிற்கு சென்று தேடி பார்த்தோம் கிடைக்காத நிலையில் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் மனு குடும்பத்துடன் சென்று அளித்துள்ளனர். யார்மேதாவது சந்தேகம் உள்ளதா என்று காவல்துறையினர் விசாரித்த நிலையில் ஒகேனக்கல் பகுதி நீர்வீழ்ச்சி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக புகார் மனுவில் குறிப்பிட்ட உள்ளது.
இதைத்தொடர்ந்து புகார் மனுவை எடுத்துக் கொண்ட ஏரியூர் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)

