Type Here to Get Search Results !

பென்னாகரம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பேரூராட்சி இயக்குனர்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குர்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .பென்னாகரம் பேரூராட்சியில் 2019-2020 நிதியாண்டில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 2.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் தொட்டிகள் 2020-2021 ஆம் நிதி ஆண்டில் மூலதனம் மானியத் திட்டத்தின் கீழ் 4.5கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டடப்பணிகள் 2022-2023 நிதியாண்டில் 1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி 2022-2023 நிதியாண்டில் 11.75 லட்சம் மதிப்பீட்டில் வளம் மீட்பு பூங்காவில் மக்கும் கழிவுகளை பிரிக்கும் பகுதிக்கு மேற்கூரை அமைக்கும் பணி உள்ளிட்ட திட்ட பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண் குர்லா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல் பென்னாகரம் புதிய பேருந்து நிலைய கட்டிட பணிகளை மூன்று மாதத்திற்குள் நிறைவு படுத்தி. மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஆணையிட்டார். அதேபோல் 16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உள்ள பயோமைமிங்(biomining) முறையில் குப்பைகளை உரமாக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார் ஆய்வுகளின் போது நிர்வாக பொறியாளர்கள் கணேச மூர்த்தி, மகேந்திரன் உதவி நிர்வாக பொறியாளர் சுப்பிரமணி உதவி பொறியாளர் பழனி பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி பேரூராட்சி செயல் அலுவலர் கீதா துணைத் தலைவர் வள்ளியம்மாள் பவுன்ராஜ் கவுன்சிலர் மற்றும் பணி நியமன குழு தலைவர்  மோசின்கான் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


- பென்னாகரம் ஒன்றிய செய்தியாளர் S. திருவேங்கடம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies