Type Here to Get Search Results !

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே செய்யாத பணியை செய்து முடித்து விட்டதாக கூறிய மாவட்ட மருத்துவத்துறை அலுவலர்கள் தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நேரில் ஆய்வு.


தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களிலிருந்தும் உள்புற நோயாளிகள் மற்றும் வெளிபுற நோயாளிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக நவீனமயமாக்கப்பட்ட புதிய மகப்பேறு பிரிவு என்று தனியாக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. மகப்பேறு பிரிவில் கழிவறை செல்லும் பாதை சிதலடைந்து காணப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி தாளில் செய்தி வெளியானது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கூடல் கிராம வழித்தடத்தில் பயணிகளை ஏற்றி வந்த நகர பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 25 பேர் காயம் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் மருத்துவமனைக்கு சென்று தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி உள்ளிட்ட மருத்துவ அலுவலர்களுடன் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தி தாளில் வெளிவந்த செய்தியை மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மிகவும் சிதலமடைந்த நிலையில், டைல்ஸ் பெயர்ந்து கழிவறைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த கழிவறை பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழிவறை செல்லும் பாதையை உடனடியாக விரைந்து சீரமைக்க வேண்டுமென மருத்துவ அலுவலர்களிடம் தெரிவித்தார். 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாவட்ட மருத்துவத்துறை அலுவலர்களிடம் சிதலமடைந்த நிலையில் இருந்த கழிவறை சீரமைக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். அதற்கு துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சரி செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து, கூட்டம் முடிந்த பின்னர், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்கு நேரில் சென்று கழிவறை செல்லும் பாதையை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பார்வையிட்டார்.  அங்கு எந்தவொரு பணியும் செய்யாமல் பழையப்படியே பாதை சிதலடைந்து காணப்பட்டது. எல்.எல்.ஏ மருத்துவ நிர்வாக அதிகாரிகளை நேரில் அழைத்து கழிவறைக்கு செல்லும் நடைபாதை சரி செய்யப்பட்டுவிட்டதாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கூட்டத்தில் தெரிவித்தீர்கள், இங்கு பணி முடிக்காமல் உள்ளீர்கள் உடனடியாக தரமான முறையில் விரைந்து சரி செய்ய மருத்துவத்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies