தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர் கழகம் சார்பில் பணி நிறைவு பெறும் மாவட்ட கல்வி அலுவலர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட மாறுதல் பெற்ற தலைமைய அசிரியர்களுக்கு பாராட்டு விழா தர்மபுரி அதியமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் பாபுசுந்தரம், மாநில சிறப்பு தலைவர் பொன்முடி ஆகியோர் தலைமை வகித்தனர்.
சீனிவாசன், வெங்கடேசன், மாதேசன், நாகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற 3 மாவட்ட கல்வி அலுவலர்கள், 17 தலைமையாசிரியர்களின் பணி நிறைவையும் மாறுதல் பெற்ற தலைமையாசிரியர்களையும் பாராட்டி பரிசளித்தார்.

இதில் பணி நிறைவு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜகோபால், முனிமாதன், ராஜா அண்ணாமலை, தலைமையாசிரியர்கள் சேகர், தெரசாள், சுமித்ரா, அண்ணாதுரை, கிருஷ்ணமூர்த்தி, மாதன், சிங்காரவேலன், மதிவாணன், தன்ராஜ், மணிவண்ணன், கௌதமன், கிருஷ்ணமூர்த்தி, முனிராஜி, முருகன். சந்திரா மற்றும் மாறுதல் பெற்ற தலைமையாசிரியர்கள், உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார், மாவட்ட செயலாளர் அப்துல்அஜீஸ், கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

