Type Here to Get Search Results !

மே தின கிராம சபை கூட்டத்தில் எழில்மிகு ஊராட்சியாக பி.செட்டிஹள்ளி ஊராட்சியை மாற்ற உறுதிமொழி ஏற்பு.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பி.செட்டிஹள்ளி ஊராட்சியில்  மே தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் கணபதி தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு கணக்கு, சுகாதாரம், குடிநீர், நீர் மேலாண்மை,  பிளாஸ்டிக் இல்லா ஊராட்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 



இதில் நான் எப்போதும் மலம் கழிக்க கழிப்றையை மட்டுமே பயன்படுத்துவேன், குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து தூய்மை காவலரிடம்  கொடுப்பேன். என் குப்பை என் பொறுப்பு  உணர்ந்து  எனது வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீரை தெருக்களில் தேங்க விடாமல் பாதுகப்பாக அகற்றுவேன், நமது கிராமத்திற்கு எழில்மிகு கிராமமாக மாற்றும் முற்சியில் நான் ஈடுபடுவேன் என  உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் கோவிந்தன், கிராம நிர்வாக அதிகாரி, வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies