
ஆர்ப்பாட்டத்தின் போது கள்ளச்சாராய மரணங்களை கண்டித்தும், பெருகிவரும் போலி மதுபானம் விற்பனையை கண்டித்தும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், பெருகிவரும் ஊழல் முறைகளை தடுக்கத் தவறிய தமிழக அரசை கண்டித்தும், இவை அனைத்துக்கும் பொறுப்பேற்று தமிழக முதல் - அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, தகடூர் விஜயன், மோகன், சங்கர், கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், பழனி, மதிவாணன், வேலுமணி, சேகர், செந்தில்குமார், செல்வராஜ், முருகன், கோபால், செந்தில், விஸ்வநாதன், பசுபதி, மகாலிங்கம், செல்வம், தனபால், அன்பு, கூட்டுறவு பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி மற்றும் பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.
.gif)

