

நிகழ்ச்சிக்கு வெள்ளி சந்தை துணை மின் நிலைய செயற்பொறியாளர் வனிதா முன்னிலை வகித்தார், இதில் பேசிய தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் பெருகி வரும் வாகன போக்குவரத்தால் நச்சுப் புகை வெளியேறி சுற்றுப்புறத்தை பாதிப்படைய செய்வதோடு மட்டுமல்லாமல் ஓசோன் படலத்தை பாதிப்படைய செய்கிறது.
இதனனால் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதுடன் மழைப்பொழிவை பாதிக்கின்றது, மேலும் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனன தவிர்க்கும் பொருட்டு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் எந்தவித அச்சமுமின்றி மின்சார வாகனத்தை பயன்படுத்தி சுற்றுசூழலை பாதுகாக்க கேட்டுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து துணை மின் நிலையத்திலிருந்து வெள்ளி சந்தை 4 ரோடு பகுதி வரை விழிப்புணர்வு மின்சார வாகன பேரணி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்பொறியாளர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
.gif)


