Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் சிறுதானிய உணவு குறித்து மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் தர்மபுரியில் நடந்தது.


தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் சிறுதானிய உணவு குறித்து மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் தர்மபுரியில் நடந்தது. மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாயகி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி சட்மன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், அனைத்து ரேசன் கடைகளிலும், அனைத்து உணவு வழங்கும் திட்டங்களிலும் சிறுதானியங்களை வழங்க வேண்டும். ஊராட்சிகளுக்குட்பட்ட தரிசு நிலங்களை சிறுதானியம் உற்பத்தி செய்யும் பெண் விவசாயிகள் மற்றும் கூட்டு விவசாய குழுக்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்க வேண்டும். பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் பொருட்டு சிறுதானிய விதை திருவிழாக்களிலும், கிராமங்கள், பள்ளி, கல்லூரிகளிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். சிறுதானியங்களின் விலை அரிசி, கோதுமைக்கு மிகாமல் இருக்க சிறுதானியத்தின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.


ஊட்டச்சத்து குறைபாடுகளையும், ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மாறாக சரிவிகித உணவான சிறுதானியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, விடுதிகள், சிறைச்சாலைகள், அரசு உணவகங்களில் காலை உணவில் சிறுதானித்த பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் காலை உணவில் சிறுதானியத்தை பயன்படுத்த வேண்டும். ரேசன் கடைகளில் சிறுதானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆனந்தன், ரியல்பவுண்டேசன் இயக்குனர் செந்தில்ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகன், சென்னப்பன், மாரியப்பன் மற்றும் பெண்கள் இணைப்புக்குழு உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies