தருமபுரியில் திறந்தவெளி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சேமிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார், சுமார் ரூ.61 லட்சம் மதிப்புள்ள நெல் முட்டைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சேமித்து வைக்கப்பட்ட 7 ஆயிரம் மூட்டை நெல் மாயமானதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள், தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். நெல் மூட்டைகள் காணாமல் போனதாக எழுந்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் ஆய்வு செய்தார். நுகர்பொருள் வாணிப கிடங்கு அலுவலர்கள் நெல் அரவை ஆலைகளில் ஆய்வு செய்தனர். நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மூலம் அனுப்பப்பட்ட மூட்டைகள் மட்டுமே இருக்கின்றனவா என ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு செய்த பின் ஆட்சியர் சாந்தி செய்தியாளர்களை சந்த்தித்து பேசினார். அப்போது; தருமபுரி மாவட்ட நுகர்பொருள் வாணிப கிடங்கில் 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமாகவில்லை. நெல் மூட்டைகள் காணாமல் போனதாக வெளியான தகவலில் உண்மையில்லை. நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. நெல் மூட்டைகளை கணக்கிட சென்னையிலிருந்து குழு வரவுள்ளது எனவும் கூறினார்.
.gif)

