Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா.


தருமபுரி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா இன்று நடைபெற்றது,  நிகழ்வு தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடப்பட்டது.  இரண்டாம் நிலை நூலகர் திரு. ந.ஆ.சுப்ரமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் திரு.கோ.மாதேஸ்வரன், தலைமை ஆசிரியர் திரு. மா.பழனி அவர்கள் பட்டதாரி ஆசிரியர் முனிராஜ் மற்றும் கம்பன் கழக உறுப்பினர் கவிஞர், க.சி.தமிழ்தாசன் அவர்கள் நூல் கட்டுநர் திரு.பி.சரவணன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 



கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு நடைபெற்ற ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கதைசொல்லுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரண்டாம்  மூன்றாம் இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் திருமதி தா.மாதேஸ்வரி அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.  இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், நூலக நண்பர்கள் திட்ட தன்னார்வலர்கள், இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட மைய நூலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வின் நிறைவாக மூன்றாம் நிலை நூலகர் திரு.என்.பி.முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies