Type Here to Get Search Results !

ஒகேனக்கல் மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்து ஒகேனக்கல் மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து, தற்பொழுது கோடை காலம் என்பதால் ஒகேனக்கலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.  


இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஒன்று ஒகேனக்கல் பகுதிக்கு சென்றது, பென்னாகரம் அடுத்த மேடம் பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்த பொழுது, ஆஞ்சிநேயர் கோவில் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து தீடீரென மலை பாதையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து அருகில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.


இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர் 5 பேர் படுகாயம் அடைந்தனர், படுகாயம்  அடைந்தவர்களை பென்னாகர அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


- பென்னாகரம் செய்தியாளர் S.திருவேங்கடம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies