தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அதிமுக ஒன்றிய, நகர கழக சார்பில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து பாலக்கோடு நகர செயலாளர் ராஜா தலைமையில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தொண்டர்கள் கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்கள் கோபால் வக்கில் செந்தில். முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், அவைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந் நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, விமலன், பாலகிருஷ்ணன், முன்னாள் தொகுதி அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட கவுண்சிலர் சரவணன் உள்ளிட்ட திரளாக கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.