தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் காவல் கண்காணிப்பாளர் திரு.N.ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் பொதுமக்களின் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த முகாமில் மொத்தம் 117 மனுக்கள் பெறப்பட்டு உடனடி விசாரணை நடத்தி 90 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் P. இளங்கோவன், அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விசாரணை செய்து உடனடி தீர்வு காணப்பட்டது.