தருமபுரி மாவட்டம், புட்டிரெட்டிபட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத இறந்த முதியவரை பற்றி விசாரித்ததில் 65 வயது மதிக்கத்தக்க இவர், வள்ளிமலை கோவிலில் சாதுவாக இருந்து வந்துள்ளார். அவ்வப்போது மொரப்பூர் பகுதியில் புண்ணியம் செய்து வருவார். கடந்த வாரம் புட்டிரெட்டிபட்டி ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேலம் ரயில்வே காவல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் காவல்துறை மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்து, சேலம் இரயில்வே காவலர் கோப்பன்னா, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், சந்திரசேகர், விஜயகாந்த் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.