Type Here to Get Search Results !

தருமபுரியில் தடகளம், கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம்.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக 01.05.2023 முதல் 15.05.2023 வரை மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் தடகளம், கால்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுக்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.


பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 வரையிலும் நடைபெறும். கோடைகால பயிற்சி முகாமில் சிறந்த விளையாட்டு வீரர்களை கொண்டு அந்தந்த விளையாட்டுக்களில் பயிற்சி அளிக்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் முட்டை, பால். சான்றிதழ்கள் வழங்கப்படும்.


எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies