Type Here to Get Search Results !

மே 1 கிராம சபை கூட்ட விவாத பொருள்கள் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்படும் கிராம சபை கூட்டம் (01.05.2023) சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் ஆணையர் அவர்களது அறிவுரைகள்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தின கிராம சபைக்கூட்டம் 01.05.2023 அன்று காலை 11.00 மணி முதல் நடத்தப்படவுள்ளது. 

அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள். கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சிமன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் இக்கிராம சபை கூட்டத்தில் கீழ்கண்ட பொருள்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது:-

  1. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். 
  2. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல்.
  3. சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல்.
  4. கிராம வளர்ச்சி திட்டம் (VPDP) குறித்து விவாதித்தல்:
  5. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல்.
  6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து விவாதித்தல்.
  7. பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் குறித்து விவாதித்தல்.
  8. அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்து விவாதித்தல்.
  9. பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்து விவாதித்தல்.
  10. தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)
  11. தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) நிலை -II:
  12. கழிப்பறை கட்டி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பாராட்டு தெரிவித்தல்.
  13. திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல்
  14. திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்
  15. நெகிழிக்கு மாற்று பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்
  16. நெகிழிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா;வு குறித்து விவாதித்தல்
  17. திரவக் கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்
  18. ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்!
  19. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல்
  20. நான் முதல்வன் திட்டம் குறித்து விவாதித்தல்.
  21. இதர பொருட்கள் குறித்து ஏதேனும் இருப்பின் கிராம சபையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies