தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 01.05.2023 - திங்கள்கிழமை "மே தினம்" அன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் முன்னாள் / படைவீரர் மதுவிற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி மூடிவைக்க உத்தரவிடப்படுகிறது.

மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)

