Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே 24 மணி நேரமும் சரக்கு விற்பனை செய்த சந்து கடை; கோபத்தில் அடித்து நொறுக்கிய பொதுமக்கள்.

 

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்  பூதிநத்தம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் நீண்ட நாட்களாக சந்து கடையில் 24X7 என்ற அடிப்படையில் 24 மணி நேரமும் (கள்ளத்தனமாக) காவல் துறை ஒத்துழைப்புடன் மது விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 



இது தொடர்பாக இது கிராம மக்கள் கடந்த  கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரிடமும் மனு வழங்கியுள்ளனர். மனு வழங்கியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு பக்கம் அரசு மதுபான கடை 10 மணி நேரம் திறந்து வைத்து கிராம மக்களை குடிக்க வைத்து வந்த நிலையில் மறுபுறம் சந்து கடையில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் கடையை வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்து இரவு பகல் எந்நேரமும் கிராமத்தில் கூலிவேலை செய்யும் மக்களையும் அவர்களை பணத்தை பறிக்கும் நோக்கில் விற்பனை செய்து கிராம மக்கள் அனைவரையும் குடிக்க வைத்து வந்துள்ளனர். 


இதனால் இன்று ஆத்திரமடைந்த கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று ஜெயராமன் வீட்டை முற்றுகை இட்டனர். பின்னர் வீட்டில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை எடுத்து வெளியில் கொட்டி அழித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பென்னாகரம் பகுதிகளில் கிராமங்கள் தோறும் சந்து கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


இதைத் தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies