தர்மபுரி - பென்னாகரம் செல்லும் சாலையில் இண்டூர் அடுத்த சோம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன்(45) விவசாயி அப்பகுதியில் விவசாயம் வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தை செம்பட்டி கிராம நிர்வாக அலுவவளர் ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தவறாக சிட்டா போட்டு கொடுத்தாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த விவசாயி முனியப்பன், சோம்பட்டி அருகே உள்ள பவர் கிர்டு உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி தனக்கு சொந்தமான நிலத்திற்கு, ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சிட்டா கொடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து வருகிறார், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த இண்டூர் போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் சம்பவ இடத்தில் முனியப்பனிடம் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.