Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம்.

Top Post Ad


தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் தேர்தல் பணிக்குழு தலைவர்கள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்  தருமபுரி மேற்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் வாசுநாயுடு தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மேற்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் சந்திரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன், மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் அன்பழகன், தருமபுரி நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் மரு.இரா.செந்தில், கி.பாரிமோகன், மாநில துணை தலைவர்கள் பெ.சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.


இந்நிகழ்ச்சியில், பாமக மாவட்ட தலைவர் மு.செல்வகுமார், மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், மு.மனோகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஆ.அன்பழகன், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் ரா.கார்த்திகேயன், பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் பெ.சக்தி தேர்தல் பணிக்குழு ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் 

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies