
கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் நல சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் கன்னியப்பன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார், மாவட்டத் தலைவர் திரு. அதிமான் அவர்கள் தலைமை தாங்கினார் பின்னர் மாநில தலைவர் Ln A. சிவகுமார் PMJF அவர்கள் தலைமை உரையுடன் சங்கத்தின் பல்வேறு வளர்ச்சிகள் குறித்தும் அடுத்த மாதம் சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெறும் புகைப்பட கலைஞருக்கான இன்டர்நேஷனல் டிஜி மீடியா கண்காட்சிக்கு அனைத்து புகைப்பட சொந்தங்களும் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு கொடுக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான மாநில சங்கத்தின் டைரி வெளியீடு மற்றும் புகைப்பட கலைஞர் குடும்பத்தைச் சார்ந்த மாணவி தேசிய பூப்பந்து போட்டியில் தமிழகத்திற்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்துமைக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் மாநில பொறுப்புச் செயலாளர் திரு பொன்னுசாமி அவர்கள் செயலாளர் அறிக்கை வாசிக்கப்பட்டது.
அடுத்து மாநில பொருளாளர் திரு சுரேஷ் அவர்கள் பொருளாளர் அறிக்கை வாசிக்கப்பட்டது, 32 க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாநில சங்கத்தின் சிறப்பான மருத்துவ சேவை திட்டம் கல்வி சேவை திட்டம் போன்ற மாநில சங்கத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு மாநில நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியினை மாநில அமைப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் தர்மபுரி மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் நல சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தி கொடுத்ததற்கு மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மண்டலம் 3ன் செயலாளர் திரு சக்கரவர்த்தி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக