Type Here to Get Search Results !

ராகியை கொள்முதல் செய்வதற்காகவும் மாவட்ட அளவிலான வழிகாட்டு குழு (Steering Committee) கூட்டம்.


தருமபுரி மாவட்ட வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும், நேரடியாக ராகி கொள்முதல் நிலையத்திற்கு வருகை புரிந்து ராகியை கொள்முதல் செய்வதற்காகவும் மாவட்ட அளவிலான வழிகாட்டு குழு (Steering Committee) கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகவும், நேரடியாக ராகி கொள்முதல் நிலையத்திற்கு வருகை புரிந்து ராகியை கொள்முதல் செய்வதற்காகவும் மாவட்ட அளவிலான வழிகாட்டு குழு (Steering Committee) கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (12.01.2023) நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது:- தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, சோதனை அடிப்படையில் ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்யப்படும் என அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


ராகி கொள்முதல் செய்வது தொடர்பாக சிறு/குறு விவசாயிகள் நேரடியாக ராகி கொள்முதல் நிலையத்திற்கு வருகை புரிந்து பட்டா மற்றும் அடங்கல் ஆவணங்களுடன் இணைய வழி (Online) மூலமாக தங்கள் விபரங்களை பதிவேற்றம் செய்து ராகியை விற்பனை செய்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.


மேலும் விவசாயிகள் தங்கள் விற்பனை செய்த ராகிக்கு உண்டான தொகையினை வங்கி கணக்கில் நேரடியாக (ECS) செலுத்தப்படும் எனவும், சிறு/குறு விவசாயிகள் ராகி சிறுதானியம் விற்பனை செய்வது தொடர்பான தங்களின் சந்தேகங்களை கீழ்கண்ட வட்டார வேளாண்மை அலுவலர்கள் மூலம் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்களால் தெரிவிக்கப்பட்டது.


  1. தருமபுரி திருமதி. ரேவதி - 9080336256, திருமதி. இளவரசி - 9486291404
  2. நல்லம்பள்ளி திரு. இளங்கோவன் 7708904543
  3. பாலக்கோடு திரு. மணிவண்ணன் 9865543110
  4. காரிமங்கலம் திரு. கனகராஜ் 8778595191
  5. பென்னாகரம் திரு. அன்பரசு 8248236372
  6. அரூர் திரு. குமார் 8825756228
  7. மொரப்பூர் திருமதி. ராஜேஸ்வரி 9566766884
  8. பாப்பிரெட்டிப்பட்டி திருமதி. ஜீவகலா 9865754526


இக்கூட்டத்தில் தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா, தருமபுரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் திரு.இராஜேந்திரன், உதவி இயக்குநர் வேளாண்மை (தரக்கட்டுபாடு) திரு.தாம்சன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies