தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய தகுதி பெற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப்பணியிட விவரங்கள்:
பட்டதாரி ஆசிரியர் - 1
- டாக்டர் அண்ணல் அம்பேத்கர் ஆதிதிராவிடர் மேல் நிலை பள்ளி, மருதிப்பட்டி. (கணிதம்), காலியிடங்கள் - 1.
இடைநிலை ஆசிரியர்
- அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, மாரியம்பட்டி, காலியிடங்கள் - 2.
- அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, மருதிப்பட்டி காலியிடங்கள் -1.
- அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நெருப்பாண்டகுப்பம் காலியிடங்கள் -1.
- அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, கே.புதூர் காலியிடங்கள் -1.
- அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, மொண்டுக்குழி காலியிடங்கள் -1.
- அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, கண்ணம்பள்ளி காலியிடங்கள் -1.
- அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி, ராஜாபேட்டை காலியிடங்கள் -1.
தகுதி பெற்ற நபர்கள் உரிய கல்வித்த்தகுதி சான்றுகளுடன் எழுத்து மூலமான விண்ணப்பங்களுடன் நேரடியாகவோ/ அஞ்சல் மூலமாகவோ 19.01.2023 - க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி – 636705 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)

