Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை சார்பில், தருமபுரியில் பொங்கல் - விழா 2023.


தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில்ஆண்டுதோறும் பொங்கல் விழாகொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக தர்மபுரியில்தான் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழா தருமபுரி கிருஷ்ணகிரி சாலையில்  இராமாக்காள் ஏரி பூங்காவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி சுற்றுலா துறை அலுவலர் கதிரேசன் அனைவரையும் வரவேற்றார்.

தர்மபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது மற்றும் நகராட்சி ஆய்வாளர். சித்ரா சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சுற்றுலாத்துறை அலுவலர் கதிரேசன் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.


பொங்கல் என்பது தமிழகத்தின் அறுவடை திருநாள். இது தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விவசாயப் பருவத்தின் முடிவையும் குறிக்கிறது. இது  விவசாயிகளுக்கு, அவர்களின்  வழக்கமான வேலைகளில் இருந்து ஓய்வு அளிக்கிறது. விவசாயிகளும் நல்ல விளைச்சல் கொடுக்க பூமிக்கு பூஜை செய்கிறார்கள்.

 

கிராமியக் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த இந்த பொங்கல் விழாவில் திமுக நகர செயலாளர். நாட்டான் மாது, தர்மபுரி நகர மன்ற துணைத் தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் தண்டபாணி, அலமேலு சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். 


பொங்கல் விழாவில் பெண்களுடன் இணைந்து அம்மனுக்குப்படையலிட்டு, சூரியனை வழிபட்டு மண்பானையில் பொங்கல் வைத்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies