மொழி நாம் சிந்திக்கும் விதத்தை வடிவமைக்கிறது மற்றும் நாம் எதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. இது மிகவும் சக்திவாய்ந்த தகவல்தொடர்பு வழிமுறை மற்றும் மனிதனின் ஒருங்கிணைந்த பகுதியாகும். மொழித் துறையில் சமீபத்திய போக்குகள் மற்றும் புதுமைகளைப் பற்றி அறிவைப் பெற ஒரு அசாதாரண வாய்ப்பாகும்.
ஶ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி எப்பொழுதும் பல்வேறு கல்வி மற்றும் இணை கல்வி நடவடிக்கைகள் மூலம் அதன் இளம் மாணவர்களிடையே படைப்பாற்றலைத் தூண்ட முயற்சிக்கிறது. மாணவர்கள் பல்வேறு துறைகளில் தங்கள் படைப்புத் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்கு எப்போதும் முன்முயற்சி எடுக்கிறது. இந்த வகையில் இன்று நடந்த இந்த கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் படைப்பு திறனை மட்டுமல்லாமல் ஆங்கில மொழி அறிவையும் வெளிப்படுத்தியது அனைவரையும் ஆச்சர்யப்படுதியது.
பள்ளியின் துணை முதல்வர் ஜெசிந்தா டி சில்வா, பொறுப்பு ஆசிரியை ஜெரினா, ஆங்கில பாடப்பிரிவின் துறைத்தலைவர் வாசுகி மற்றும் ஆசிரியர்கள் ஆனந்த், குமார், ஜனனி, நவிதா, பிருந்தா, V.D.சரவணன், லீனா ஜான்சன் மற்றும் ஆரம்ப கல்வி ஆசிரியைகள் மாணவர்களின் மொழி அறிவை வெளிக்கொணர்வதில் பெரும்பங்காற்றினர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

