தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், சூடானூர் ஊராட்சி நாகனூர் கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும், கடைக்கோடி ஏழை மக்களுக்கு குடிநீர் கிடைத்திட பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 12 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணியினை பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதாசரவணன், ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளிநாகன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் ராதா ராமமூர்த்தி மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

