தருமபுரியில் விஜய் வித்யாலயா பள்ளியில் மாநில அளவிலான செஸ் போட்டி தொடங்கியது 1000 மாணவ மாணவிகள் பங்கேற்பு. மாநில அளவிலான 24 -வது செஸ் போட்டி தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் டி என் சி மணிவண்ணன் தலைமை வகித்தார்.
பள்ளியின் தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத்தலைவர் தீபக், செயலாளர் டாக்டர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் கௌசல்யா குத்துவிளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளை சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், ராஜசேகரன், சேகர் மற்றும் பயிற்சியாளர்கள் நடத்தி வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

