Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் சாலை பாதுகாப்பு வார விழா


தமிழக அரசால் போக்குவரத்து துறை மூலம் தமிழகம் முழுவதும் ஜனவரி 11 ம் தேதி முதல் 17 ம் தேதி வரை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம்  சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி  பாலக்கோடு சர்க்கரை  ஆலையில் வட்டார போக்கு வரத்து அலுவலர் தாமோதரன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.


இதில் மாட்டு வண்டி, டிராக்டர், லாரி உள்ளிட்ட கரும்பு ஏற்றி வரும் வாகனங்களில் இரவு நேரத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில் பின்னால் வரும் வாகனங்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் வாகனங்களின் பின்புறம் ஒளி பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டது.


மேலும்  நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும், அதே போன்று இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் திருப்பங்களில் முந்தி செல்ல கூடாது, அதிவேகமாக செல்லுதல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் போன்றவற்றால்தான் பெருமளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன எனவே போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி, சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் சக்திவேல், சர்க்கரைஆலை பணியாளர்கள், ஓட்டுநர் பயற்சி பள்ளி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies