தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர் ரமேஷ் தலைமையில், தர்மபுரி மாவட்ட மையத்தில் சங்க கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
- ஊரக வளர்ச்சி துறையின் உயரதிகாரிகளின் எல்லை மீறிய தொந்தரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இத்துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் அனைத்து விதமான அலுவல் சார்ந்த வாட்சப் குழுக்களில் இருந்தும் 9.1.2023 முதல் வெளியேறுவது என முடிவு செய்யப்பட்டது.
- ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதை சீர்குலைக்கும் விதமாக பொங்கல் திருநாள் அன்று அலுவலகம் சென்று சமத்துவ பொங்கல் கொண்டாட உத்தரவிட்ட ஊரக வளர்ச்சி துறை ஆணையரின் உத்தரவை புறக்கணிக்க தீர்மானிக்கப்பட்டது.
- ஊரக வளர்ச்சி ஆணையர் மற்றும் கூடுதல் இயக்குனர்களின் எல்லை மீறிய பணி அழுத்தம், அனாகரீகமான வார்த்தை பிரயோகங்கள் மற்றும் இரவு நேரங்கள் வரை நீடிக்கும் காணொளி மற்றும் நேரடி ஆய்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 9.1.23 முதல் காலை 10.00 முதல் 5.45 வரை மட்டும் விதிப்படி (Work As Per Rule) பணியாற்றுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

