தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாறு அணையை ஒட்டி செல்லும் தொப்பூர்- பொம்மிடி சாலை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த சாலையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப, அவர்கள் இன்று (07.01.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாறு அணைய ஒட்டி செல்லும் தொப்பூர்- பொம்மிடி சாலை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கி நிற்பதால், சாலை மேலும் சரிந்து விழும் சூழல் ஏற்படுவதால் இந்த தொப்பூர்-பொம்மிடி சாலையில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு, மேலும் அந்த பகுதியில் உள்ள சாலையின் இறுபுறமும் மண் கொட்டி எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு மண் அரிப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்த சாலை பணிகளை தரமாகவும், குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப, அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின் போது தருமபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு.எம்.ஏ.ராஜதுரை, நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.எம்.ஷகிலா, திருமதி.உ.கௌரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
.gif)

