Type Here to Get Search Results !

கும்மனூர் கிராமத்தில் 18 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிக்கு முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான கே.பி.அன்பழகன் பூமி பூஜை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், கும்மனூர் ஊராட்சி கும்மனூர் கிராமத்தில் ஜெ.ஜெ. அம்மா நகர், அருந்ததியர் காலணி, புதுத்தெரு, செட்டியார்தெரு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும், கடைக்கோடி ஏழை மக்களுக்கு குடிநீர் கிடைத்திட பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணியினை பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன்,  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதாசரவணன், ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் அரசு வழக்கறிஞர் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies