Type Here to Get Search Results !

சந்தை தோப்பு வாரச் சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சந்தை தோப்பு பகுதியில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும்  கூடுவது வழக்கம். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்  மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள், பொது மக்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். 


இந்த வார சந்தைக்கு மலைப் பகுதிகளில்  இருந்து கொண்டு வரப்படும் ஆடுகளுக்கு வியாபாரிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால்  இந்த சந்தைக்கு சேலம், தலைவாசல், கெங்கவல்லி, வேலூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர் .



இந்த நிலையில் இன்று நடைபெற்ற செவ்வாய்க்கிழமை வாரச்சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி 3000க்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர். 


இதில் ஆடுகளின் எடைக்கு ஏற்றார் போல் ரூ 2 ஆயிரத்தில்  இருந்து அதிக பட்சமாக ரூ 15 ஆயிரம் வரை விலை போனது. சுமார் 2500 ஆடுகள் ரூபாய் இரண்டு கோடி வரை விற்பனை ஆனது. இந்த ஆடுகளை வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு விலை கேட்டதால் ஆடுகளின் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies