அரூர் 10 வேளாண்மை துறை விரிவாக்க சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை ஆட்மா திட்டத்தில் நானோ யூரியா செயல் விளக்கம் உதவி வேளாண்மை அலுவலர் திரு சிவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு கூறும் பொழுது நானோ யூரியா ஒரு ஏக்கருக்கு 500 மில்லி போதுமானது மேலும் பயிர்களுக்கு தெளிக்கும் பொழுது ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு முதல் நான்கு மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும் இவ்வாறு பயன்படுத்தும் பொழுது பயிர்கள் என்பது சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பயிர்கள் எடுத்துக் கொள்கிறது. மேலும் மண்புழுக்களுக்கு பாதிப்பு உண்டாவதில்லை எனவே விவசாயிகள் திரவ வடிவிலான நானோ யூரியாவை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

மேலும் இந்த நானோ யூரியாவை இந்திய உழவர்கள் உர கூட்டுறவு நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறார்கள் விவசாயிகள் குருணை வடிவ யூரியாவிற்கு பதிலாக திரவ வடிவ நானோ யூரியாவை பயன்படுத்தி பயன் அடையுமாறு விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் மற்றும் அதன் பயன்கள் பற்றி எடுத்துக் கூறினார்கள். இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
.gif)

