Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் பாரம்பரிய முறைப்படி இயற்கைக்கு நன்றி சொல்லும் வகையில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே. மணி சார்பில் சமத்துவ பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் எம் எல் ஏ. மற்றும் பாமகவின் கௌரவ தலைவர் ஜிகே. மணி அவர்கள் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் சூரியனுக்கு பொங்கல் வைத்தும் மாடுகளுக்கு வண்ணம் தீட்டியும் மகிழ்ந்தனர்.இதில் இயற்கைக்கு நன்றி சொல்லுவோம் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுவோம் மழைக்கு நன்றி சொல்லுவோம் சூரியனுக்கு நன்றி சொல்லுவோம் மண்ணுக்கு நன்றி சொல்லுவோம் மலைக்கு நன்றி சொல்லுவோம் என்று கோஷமிட்டு சிறப்பாக கொண்டாடினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் தற்காப்பு கலைகளான முதலில் பாரம்பரிய கலைஞர்கள் பம்பை மேளம் இசைக்க, கோலாட்டம், மான் கொம்பு தற்காப்புக் கலை, கும்மி பாட்டு, சிலம்பாட்டம் , கருப்புசாமி வேஷம், நெருப்பு வளையம் சுற்றுதல், மாரியம்மன் வேஷம், பத்ரகாளி வேஷம், சிவன் பார்வதி வேடம்  ஆகிய பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாரம்பரிய உடையான வேட்டி துண்டு,  புடவைகள் வழங்கப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி எம்எல்ஏ. வெங்கடேஸ்வரன், பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், மாநில இளைஞரணி செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலேசன், பென்னாகரம் சேர்மன் கவிதா ராமகிருஷ்ணன், பாலக்கோடு தெற்கு ஒன்றிய அமைப்பாளர் ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், பென்னாகரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், நகர தலைவர் சந்தோஷ், செயலாளர் ஜீவா, பாட்டாளி சமூக ஊடக பேரவை அன்பு  மற்றும் வன்னியர் சங்கத்தின் நிர்வாகி எம் பிரேம் குமார், பா.ம.க கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies