Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சி பயிற்சியின் நிறைவு விழா.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தருமபுரி தேவரசம்பட்டியில் நடத்தப்பட்ட இளைஞர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சி பயிற்சியின் நிறைவு விழா இன்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. ஸ்பீடு தொண்டு நிறுவன துணைத்தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். 



நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தலைவர் சார்பில் அவர் கணவர் பெரியசாமி, ஏளகிரி ஊராட்சி கவுன்சிலர் காமராஜ், எப்ரன் தொழில் பயிற்சி நிறுவன இயக்குநர் சைன் தாமஸ், அதியமான் கோட்டை திருவள்ளுவர் இளைஞர்நற்பணி மன்ற தலைவர் விக்ரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். முன்னதாக பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் பாப்பாரப்பட்டி ஓ ஜே அள்ளியில் இயங்கி வரும் ஸ்பீடு தொண்டு நிறுவன அலுவலக பணிகளை பார்வையிட்டு பின்னர் கலந்துரையாடினர்.


அதன் பின் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தினையும், பாரத மாதா கோவிலையும் அவர்கள் பார்வையிட்டனர். மேலும் மூன்று நாட்களுக்கு இளைஞர் தலைமைத்துவம் குறித்த பயிற்சி வழங்கிய கருத்துரையாளர்கள் அரூர் எல்ப் தொண்டு நிறுவன இயக்குநர் கருணாமூர்த்தி, ரியல் பவுண்டேசன் இயக்குநர் செந்தில் ராஜா, அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலமுருகன், எப்ரன் தொழில் பயிற்சி நிறுவன இயக்குநர் சைன் தாமஸ், மாநில பயிற்றுநர்கள் பெரியசாமி, பெருமாள், ஐடியல் தொண்டு நிறுவன இயக்குநர் முனைவர் மனோகரன், நல்லானூர் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் நாகராஜ், பாப்பாரப்பட்டி ஒருங்கிணைந்நத வளர்ச்சி தொண்டு நிறுவன இயக்குநர் கமலக்கண்ணன் ஆகியோர்களுக்கு நேரு யுவ கேந்திராவின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


இப்பயிற்சியில் 50க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர் மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெற்றது குறிப்பிடத்தக்கது ஆகும். நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies