தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவிற்கு கல்லூரி தாளாளர் டிஎன்சி மணிவண்ணன் திருமதி செல்வி மணிவண்ணன் நிர்வாக இயக்குனர் விக்ரமன் கல்லூரியின் முதல்வர் ஷாகின்பானு கல்லூரியின் இருபால் பேராசிரியர் பெருமக்கள் அனைத்து மாணவிகள் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மகளிர் கல்லூரியில் பழைமையான ஆடை கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மறக்கக்கூடாது என்பதை கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அனைவருக்கும் நினைவு படுத்திய மாணவிகள். பெண்களுக்கே உரித்தான புடவை கலாச்சாரத்துடன் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பச்சரிசி, வெல்லம், செங்கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் மேளதாளங்கள் முழங்க கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டத்துடன் ஊர்வலமாக கல்லூரிக்கு கொண்டு வந்து பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்து மாணவிகள் படையலிட்ட பொங்கலை அனைவருக்கும் வழங்கினர்.
அதனை தொடர்ந்து உரியடித்தல் கும்மியடி தந்தால், கயிறு இழுத்தல், போட்டிகளும் புடவை காலச்சாரத்துடன் பொங்கல் விழாவுக்கு வந்திருந்த மாணவிகள் கிராமபுற பாடல்களுக்கு நடனமாடி பொங்கல் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

