Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் ஆதார் அட்டைகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்கள் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


UIDAI இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பான சேவைகளை பெற்றிடவும் பயன்படுகிறது. இந்நிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. 

அதன் பேரில் ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். அதுசமயம், கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று (POI-Proof of Identity ) மற்றும் முகவரி சான்று POA- (Proof OF Address) ஆகியவற்றை புதுப்பித்துக்கொள்ள

  1. வாக்காளர் அடையாள அட்டை 
  2. குடும்ப அட்டை, 
  3. ஓட்டுநர் உரிமம், 
  4. பான் கார்டு, 
  5. வங்கி கணக்கு புத்தகம் 
ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ளநிரந்தர ஆதார் சேவை மையத்தினை அணுகலாம். அல்லது மை ஆதார் என்ற இணையதளத்திலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மேற்படி ஆதார் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் (எல்காட்) மூலம் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இரண்டாவது கட்டமாக ஆதார் சிறப்பு முகாம் பின்வரும் கிராமங்களில் எதிர்வரும் 27.01.2023 வெள்ளி கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது.

தருமபுரி - சோகத்தூர் - 27.01.2023

பாலக்கோடு - எர்ரனஅள்ளி - 27.01.2023

காரிமங்கலம் - கும்பார அள்ளி - 27.01.2023

அரூர் - தொட்டம்பட்டி - 27.01.2023

மேற்படி சிறப்பு முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதார் புதுப்பித்திட தேவையான ஆவணங்களான 

  1. வாக்காளர் அடையாள அட்டை 
  2. குடும்ப அட்டை, 
  3. ஓட்டுநர் உரிமம்,
  4. பான் கார்டு, 
  5. வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ரூ.50.

தங்களின் ஆதார் அட்டைகளை புதுப்பித்து பயன்பெறுமாறு ஆகியவற்றுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி ஆப., அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884