தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஒகேனக்கல் பைபாஸ் நாகனூர் பிரிவு ரோடு அருகில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா அவர்களின் உத்தரவின் பேரில் பென்னாகரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கந்தசாமி அவர்களின் தலைமையிலான குழுவினர் பென்னாகரம் மீன் மார்க்கெட்டில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில்,விற்பனை செய்யப்படும் மீன்கள் அழுகிய நிலையில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அனைத்து கடை உரிமையாளர்களிடம் கடை வைப்பதற்கான உரிமம் பெறவும், விற்பனையாளர்கள் உடல் தகுதி மருத்துவ சான்று உள்ளிட்டவற்றை முறையாக பெற வேண்டும் எனவும்,பொது மக்களுக்கு புதிய மீன்களை சுகாதாரமான முறையில் வைத்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின் போது மீன்வள ஆய்வாளர் வேலுசாமி மற்றும் குழுவினர் உடன் இருந்தனர்.
.gif)

