தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் இரண்டாம் கட்டமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் - புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- நிதி உதவித்தொகை வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (06.01.20223) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டம் முழுவதும் ழூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வித்திட்டம் (புதுமைப்பெண் திட்டம்) இரண்டாம் கட்டத்தில் 6321 மாணவிகளின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதில், பள்ளிக்கல்வித்துறை ழூலம் நிலுவையில் உள்ள 549 விண்ணப்பங்களையும், வங்கியின் ழூலம் நிலுவையில் உள்ள 1549 விண்ணப்பங்களையும் ஆய்வு செய்து 10.01.2022 மற்றும் 11.01.2022 ஆகிய தேதிகளில் முகாம் நடத்தி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் கல்லூரி கல்வி இயக்கக தருமபுரி மண்டல இணை இயக்குநர் திருமதி. என்.இராமலட்சுமி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.பி.கே.கிள்ளிவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.வி.ஜான்சிராணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)

