Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் இளைஞர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சி பயிற்சி முகாம்.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தருமபுரி தேவரசம்பட்டியில் உள்ள எப்ரன் தொழில் பயிற்சி நிறுவன வளாகத்தில் 3நாட்கள் நடத்தப்படவுள்ள  இளைஞர் தலைமைத்துவம் மற்றும் சமுதாய வளர்ச்சி பயிற்சி முகாமின் தொடக்க விழா மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சாந்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் முன்னிலை வகித்தார். முகாமின் நோக்கவுரையினை மாவட்ட நேரு யுவ கேந்திராவின் இளைஞர் அலுவலர் பிரேம் சரத்குமார் வழங்கினார்.


முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். 50க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.


முதல் நாள் பயிற்சியில் ரியல் பவுண்டேசன் இயக்குநர் செந்தில்ராஜா, எல்ப் தொண்டு நிறுவன இயக்குநர் கருணாமூர்த்தி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சமுதாயத்தினை மேம்படுத்துவதில் இளைஞர்கள் பங்கு, தன்னார்வ மற்றும் இளைஞர் மன்றங்களின் கடமைகள், உடல் நலம் காப்பதில் யோகா மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கினர். 


முதல் நாள் பயிற்சி துவக்க விழா நிகழ்ச்சியின் நிறைவில் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies