வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக, விவசாயிகளின் நிலத்தடிநீரை பாசனத்திற்காக பெற உதவும் வகையில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (ஐந்து ஏக்கர் வரை நிலம் உள்ளவர்களுக்கு மட்டும்) பழைய திறனற்ற மின்மோட்டார் பம்ப் செட்டுகளுக்குப் பதிலாக புதிய மின்மோட்டார் பம்ப் செட்டும் மற்றும் புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு “மானியத்துடன் கூடிய மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்கும் திட்டம்” செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. அதில்,

- ஏற்கனவே EB இணைப்பு பெற்றுள்ள பழைய திறனற்ற பம்ப் செட்டுகளை மாற்ற விரும்புபவர்கள்
- தற்போதுள்ள டீசல் பம்ப் செட்டுகள் எலக்ட்ரிக் மோட்டார் பம்ப் செட்டுக்கு மாற்ற விரும்புபவர்கள் (EB இணைப்புகள் பெற்றுள்ளவர்களுக்கு மட்டும் )
- மின் இணைப்பு பெற்ற விவசாயிகளால் புதிய ஆழ்துளை கிணறு / திறந்த வெளி கிணறு/ குழாய் கிணறு அமைத்து புதிய மின்மோட்டார் பெற விரும்பும் விவசாயிகள்ஆவர் .
இத்திட்டத்தில் மின்மோட்டார்களை பெற, தலைமைப்பொறியாளர் (வே.பொ) சென்னை அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். இதில் 10 hp வரை மின்மோட்டார்கள் வாங்கலாம்.
அதற்கு 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.10,000/-வரை மானியம் இதில் எது குறைவோ அது பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு வழங்கப்படும். 2022-23ஆம் நிதியாண்டிற்கு, பொது பிரிவு விவசாயிகளுக்கு 160 எண்களும் இந்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு-20 எண்களும் ஆக மொத்தம் 180 எண்கள்/ ரூ.18.00 இலட்சம் மானியத்தில் வழங்கிட இலக்கு பெறப்பட்டுள்ளது.
மேலும் 2022-23 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்து விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலவரைபடம், சிறு விவசாயிகளுக்கான சான்று, பாஸ் போர்ட் சைஸ் போட்டோ, விவசாயிகளின் வங்கி கணக்கு எண் மற்றும் மின் இணைப்பு அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் கீழ்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விண்ணப்பிக்கும் விவசாயிகள் பிரதான மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசனம் அமைத்திருக்க வேண்டும் அல்லது அமைக்க விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும் குறைந்த பட்சம் 4 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்ட பம்ப் செட்டுகள் வாங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி. தொலைபேசி : 04342 296948.
- உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை மாவட்ட ஆட்சியர் வளாகம், தருமபுரி. தொலைபேசி : 04342 296132.
- உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மை பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், திருப்பத்தூர் மெயின் ரோடு அரூர், தருமபுரி மாவட்டம். தொலைபேசி : 04346 296077.
.gif)

