அதில், 39500 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 6591 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 863 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. மேலும், அதிக ஆட்களை ஏற்றி சென்றதாக 185 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 156 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 351 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 3642 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 315 வாகனங்களுக்கும், காப்புச்சான்று/புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 1716 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 670 வாகளங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 327 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்கண்ட வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.2,07,29,532/- மற்றும் இணக்க கட்டணமாக ரூ.1,01,84,333/- ஆக மொத்தம் ரூ.3,09,13,865/- (மூன்று கோடி ஒன்பது லட்சத்து பதின்மூவாயிரத்து எண்ணூற்று அறுபத்து ஐந்து மட்டும்) உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும், பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.1,07,52,724/- நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ.4,16,66,589/- (ரூபாய் நான்கு கோடி பதினாறு லட்சத்து அறுபத்தாறாயிரத்து ஐந்நூற்று எண்பத்தொன்பது மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், அரசுக்கு வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
.gif)

