தர்மபுரி மாவட்டம் தர்மபுரி கோட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு உட்பட்ட உட்கோட்டத்தில் 21- 22ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை பணிகள் மற்றும் சிறு பாலங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த பணியில் சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் புதிதாக போடப்பட்ட சாலையின் தரம் மற்றும் கணத்தின் அளவுகளையும் ஆய்வு செய்தார். மேலும் சாலை பராமரிப்பு குறித்து நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பாலக்கோடு- நாகதாசம்பட்டி சாலையில் நிழல் தரும் மரங்களை நடும் பணிகளையும் கண்காணிப்பு பொறியாளர் அவர்கள் ஆய்வு செய்து மரக்கன்றுகளை நட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாலக்கோடு உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.gif)

