Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தினை சென்னை தீவுத்திடலில் உள்ள அன்னை சத்யா ரேஷன் கடையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பணம், ஒரு கிலோ அரிசி, முழு கரும்பு ஆகியவற்றை தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பாலக்கோட்டில்  உள்ள அண்ணா நகர் தக்காளி மண்டி, மேல் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட  நியாயவிலை கடைகளில்  சுமார் 3,000 மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் இதயத்துல்லா, கவுன்சிலர்கள் ரூஹித், கணேசன், சிராஜ், வகாப், பெரியசாமி, ரவி, மோகன், சரவணன், ஜெயந்தி மோகன், சாதிக்பாஷா, லட்சுமி ராஜசேகர்,   திமுக நகர அவைத் தலைவர்கள் அமானுல்லா, ராஜீ, கிளை செயலாளர்கள்  ராமமூர்த்தி, அரவிந்த், குமரவேல், முருகன், துரை, மன்சூர், முகமது அலி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பு வழங்கினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies